புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 11---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧௧

101. வயிறு காய்ந்தால் வாய் திறக்க வேண்டும்
இல்லை என்றால் உயிர் துறக்க வேண்டும்.

102. சொத்துகள் சேரும் போது பலபேர்
சொல்லிய வார்த்தைகளை மறந்து விடுகின்றனர்.

103. நல்லதோ?... கெட்டதோ?... ஒரு முடிவை எடுத்துவிடு
இரண்டு பக்கமும் தலை நீட்டாதே
அது மிக ஆபத்தானது.

104. உன் இலட்சியத்தை எது தடை செய்கிறதோ?...
அதுவே உன்னை அழிக்கும் எமன்.

105. எதை நோக்கிப் பயணம் செய்கிறாயோ?...
அதை மறந்து விட்டு வேறு ஒன்றை நினைக்காதே.

106. ஒரே நேரத்தில் நல்லதையும் கெட்டதையும்
அனுபவிக்கவே முடியாது.

107. பாதிக்கப் பட்டவன் முடங்கிக் கிடக்கிறான்
பாதிப்பைத் தந்தவன் சுதந்தரமாய்ச் சுற்றுகிறான்.

108. நடக்காத ஒன்றைச் சொல்லி
எவரும் புரட்சிகள் செய்வதில்லை.

109. எதிர்த்துப் போராடுபவர்கள் கலவரத்தைத் தொடங்குவதில்லை
போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தான் கலவரத்தைத் தொடங்குகின்றனர்.

110. அடித்து ஒடுக்க முயற்சிக்கும் போது தான்
போராட்டங்கள் புரட்சியாக வெடிக்கிறது.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (29-Jun-20, 10:31 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 160

மேலே