நெஞ்சை நிமிர்த்திப் போராடு
விசாரணை என்ற பெயரில் இரட்டைப் படுகொலை....
விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும்வரை
விஸ்வரூபம் எடுத்து ஆடும் மீடியா....
வெறிபிடித்து ஆடும் சமூக ஆர்வலர் கூட்டம்....
விடிந்தவுடன் மறந்துபோகும் குடிகாரர்கள் பேச்சாய்....
விரைவில் இருந்த இடம் தெரியாமல் மறந்துபோகும்....
புதிதாய் ஒரு பிரச்சனை வந்த பின்
பழையப் பஞ்சாங்கமாய் மறைந்து போகும்....
பொள்ளாச்சி விவகாரம் என்னாச்சி...???
காசி காமவேட்டை என்னாச்சி...???
கொள்ளையும் , கொடூரக் கொலையும், காம வேட்டையும்.... தொடரத்தான் போகிறது....
ஊசித் திருடியவன் தூக்குதண்டனை கைதியாவான்....
ஊரை ஏய்த்து உயிரைக் குடித்தவன்....
உத்தமனாய் பதவியில் அமர்வான்
கடவுளாய் கைதொழப்படுவான்.....
கண்ணுக்கு எதிராய் கயமைகள் கண்டு
மானம் கெட்டு மதிகெட்டு...
சொரணை கெட்ட ஜென்மங்களாய்...
எனக்கு நடக்கவில்லை ....
நமக்கு வராது என்று...
வெந்த சோற்றை தின்று
விதிவந்தால் சாவோம் என வாழப்போகிறோமா..... ?
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது
மக்கிப்போன பழமொழி.....
ஆண்டவனே என்றாலும்
அராஜகத்திற்கு எதிராய் குரல்கொடு....
தமிழகம் முழுதும் சாத்தான் குளமாய் மாறுவதற்குள்
நீதி கேட்டு
நெஞ்சை நிமிர்த்தி போராடு!