நதி

நதி

மனிதா உன் பிறப்பு
உன் தாய் சொல்லி தான் தெரியும்
மானுடா உன் இறப்பு
புரியாத புதிர்
உனக்கு இல்லாத
மாபெரும் சிறப்பு
நதிக்கு உண்டு
அதற்கு ஆதியும் உண்டு
அந்தமும் உண்டு
மனிதா! உன் வாழ்க்கை
பயணம் நிர்ணியப்பது பலரால்.
ஆனால் நதி அது
தன் பயணத்தை தானே
தேடி கொள்கிறது.
அதன் வழியை அதுவே நிர்ணயிக்கிறது.
மானுடா! நீ ஆசையின் அடிமை
மனிதா! நீ பேராசையின் பிள்ளை
நதி அது அமைதியாக தொடங்கி
ஆர்பரித்து ஓடி
ஆனந்த பரவாகமாக
காட்சியளித்து
அனைத்து உயிரிணங்களுக்கும்
உதவுகிறது.
மானுடா நீ நதியிடம் கற்று கொள்ள
வேண்டிய பாடம் நிறைய, நிறைய..
எங்கே கற்று கொள்ள போகிறாய்!
நீ மனிதனாக இருந்தியிருதால் ஆற்று மணலை கொள்ளை அடித்து
நதி அதை சாகடித்துயிருக்க மாட்டாய்.

-

எழுதியவர் : பாலு (2-Jul-20, 6:06 pm)
சேர்த்தது : balu
Tanglish : nathi
பார்வை : 120

மேலே