சதுரங்கள் வட்டமாகுமா

சதுரங்கள் வட்டமாகுமா

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வடிவம் இறைவன் கொடுத்தது. ஒவ்வொரு வடிவுக்கும் ஒரு கனம் தந்தவனும் அவனே. இந்த உலகம் முழுதும் அணு துகள்களால் ஆனது. அந்த அணுவை படத்த இறைவன் அனைத்து உயிர்களையும் படைத்தான். ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு திறமை படைத்தான். எல்லோருக்குள்ளும் ஒரு திறமை நிச்சயம் இருக்கும். உலகை சமநிலையில் அவைகளே கொண்டு செல்லும். இன்று? மனிதன் தான் படைத்த பணத்தை மட்டுமே கொண்டு உலகின் திறமைகளை மதிக்கிறான். உண்மையான திறமைகளை மிதிக்கிறான். இது நமது பாரதத்தின் சாபமோ ? என்ற வார்த்தைகள் மனதில் ஓடின;
இன்று ஏன் இந்த சித்தாந்தம். உலகையே வருத்தப்பட வைத்த ஹிந்தி நடிகர் சுஷாந்தின் மரணம். மரணம் என்பதிலும் தற்கொலை என்பது தான் மிகவும் வருத்தப்பட வைக்கிறது. காரணம் திறமைக்கு அங்கீகாரம் இல்லை. ஒரு கனவை எல்லோரும் சேர்ந்து களைத்து விட்டோம். இல்லயேல் கனவு களைந்த பின்னரும் வாழ முடியும் என்பதை அவனுக்குள் விதைக்காது விட்டு விட்டோம். நான் ஆதி நாராயணன். ஒரு மன நல மருத்துவர்.
என் ஆழ்ந்த சிந்தனையை பார்த்து, சுருதி என் மகள் பக்கத்தில் வந்தாள். “ஆமாம் அப்பா. நானும் நேற்று முதல் இதே சிந்தனையில் மனம் மிக பாரமாகிவிட்டது டேட்.”
அவள் இப்போதான் பிளஸ் 1 படிக்கிறாள். படிப்பில் கொஞ்சம் இன்டெரெஸ்ட் கம்மி தான். ஆர்ட்ஸ் லயும், புது டிசைன் பண்றதுல தான் இன்டெரெஸ்ட். M.S.டோனி படம் அவளுக்கு ரொம்ப பேவரைட். என்னையும் அவள் தான் பார்க்க வைத்தாள். அந்த பையன் சுஷாந்த் டோனி யை மீண்டும் ஜெயிக்க வைத்தான்.
என் கனவுகளையும், சிறு வயது நினைவுகளையும் கண் முன் கொண்டு வந்தான். நம் குடும்பத்தில் ஒருத்தர் இறந்துட்டது போல அந்த இறப்பு எல்லோரையும் பாதித்து விட்டது. எல்லா இடத்திலும் அதே பேச்சு. நாமும், நம் சமுதாயமும் தெரிந்தோ தெரியாமலோ எத்தனை பேரை தற்கொலை முயற்சிக்கு தூண்டுகிறோம். இது நாம் வாழும் சமுதாயத்தின் தோல்வி அல்லவா?
சுருதி," அப்பா, ஏன் அந்த அண்ணா இப்படி செய்திட்டார். எனக்குள்ளும் ஆயிரம் கேள்விகள். ஒருத்தர் முன்னேற்றத்தை ஏன் மற்றவர்கள் தடுக்கிறார்கள் ? "
அவள் கேள்விகளை அடுக்கினாள்.
நான், " இந்த உலகம் எப்போவும் நம்மை கஷ்டப்படுத்தும். நாம தான் அதில் இருந்து மீண்டு வரணும். சாக முடிவெடுப்பது தப்பு மா." என்றேன்.
அவள்- " இந்த உலகில் இத்தனை மனிதர்கள் இருந்தும் ஒருத்தரை சாக முடிவெடுக்க வைப்பதும் தப்பு தானே அப்பா".
இன்றய குழந்தைகள் ரொம்ப தெளிவாக கேள்வி கேட்கிறார்கள்; ஆனால் நிறைய நேரம் முடிவெடுப்பதில் குழப்பிக்கொள்கிறார்கள்.
என்ன செய்வது ? மனிதன் தனக்குள் இருக்கும் தெளிவினை புரிந்து கொள்ள உலகம் விடுவதில்லை;
சொல்லுமா; என்றேன்.
அவள் " நெபொடிசும் என்பதும், அவரின் திறமைகள் அங்கீகரிக்க படவில்லை என்பதும் தான் காரணமா ? அப்பா ?
அவளே தொடர்ந்தாள். இந்த உலகம் எல்லோருக்கும் பொது தானே அப்பா; எல்லோருக்கும் ஒவ்வொரு கனவு காண்பதும் சரி தானே அப்பா; அப்புறம் ஏன் ஒருவர் மற்றவரின் இடத்தை பறிக்க முயற்சி செய்கிறார்கள் ? அனிமல் சேனல் ல கூட இது கிடையாது தானே. "
உண்மை தான் கண்ணு ;
சொல்லும் போதே எனக்கு மனம் கனத்தது. உண்மை பல முறை வலியைத்தான் தரும்.
தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் தான் சமூக மாற்றத்துக்கு பொறுப்பேற்கணும். நாம் ஓவொருவரும் சேர்ந்தது தான் இந்த சமுதாயம்.

என்ற படி என் மனைவி லட்சுமி வீட்டுக்குள் வந்தார். அவர் ஒரு ஆன்மீகவாதி;
நான் விட்ட இடத்தில இருந்து அவர் தொடர்ந்து பேசினார்.
“அடுத்த தலை முறையினரின் சிந்தனை நம்மிடம் இருந்து தான் வரும். நாம் நல்லது, கெட்டது, சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்டணும்.
இன்றைய மாற்றத்திற்கு காரணம் பேராசை; தானும் தன் தலை முறையினர் மட்டுமின்றி அதற்கு அடுத்த ஏழு தலைமுறைக்கும் சேர்த்து தானே சிந்தித்து எல்லாவற்றையும் தனதாக்கி கொள்ளும் வக்கிரம்.”
“இது ஒரு நாட்டின் தலைவருக்கு இருந்தால் பல நல்ல திட்டங்கள் போட முடியும். இதுவே ஒரு குடும்ப தலைவனுக்கு இருந்தால் அவனுக்கு அது அழிவை தான் தரும்.”
எப்படி ? அம்மா என்று சுருதி அவளுக்கு ஸ்ருதி சேர்த்தாள்.
லட்சுமி தொடர்ந்து பேசினாள்; அவளையும் இந்த செய்தி பாதித்திருக்கிறது; அதுதான் இன்று அவளை இவ்வளவு பேசவைக்கிறது; பேசட்டும் - அப்போது தான் அவளின் மனமும் கொஞ்சம் அமைதியாகும் என்று அவளை குறுக்கிடாமல் கவனித்தேன்.
“கடவுள் கிருபையால் ஒருவனுக்கு நல்ல சம்பாத்தியம் இருந்தால் அதை கொண்டு அவன் தன்னுடன் பிறந்தவர்களையும், அவனது குடும்பத்தினரையும் வாழ்விக்கவும், வழிநடத்தவும் முடியும். அது தான் அவனுக்கு இறைவனால் இடப்பட்ட கட்டளையும் கூட. ஆனால், அவனோ சுயநலமாக அவனது தலைமுறையை மட்டுமே நினைத்து, மற்றவர்களை புறக்கனித்தால் நிச்சயம் கடவுள் கொடுத்த எல்லாமும் பாழாகிப் போகும். அது தான் இன்று நடக்கிறது. மற்ற மனிதர்களும் வீட்டின் மூத்த பையனோ , பொண்ணோ , தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்த குடும்பம் வளர பாடுபட்டால், வளர்ந்த பின் தனது மூத்த சொந்த பந்தங்களை மறந்து விடுகிறார்கள். சுயநலத்தில் தமது சொந்த பந்தங்களை மறந்து தனக்கு தனக்கு ன்னு சேர்த்து சேர்த்து தனது பிள்ளைகளுக்கு பகையை தேடி வச்சுடறாங்க.

என் மனைவியின் பேச்சை மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தேன்.
அவளோ தொடர்ந்தாள்; நம் நாடு விடுதலை ஆகி எத்தனை ஆண்டு முடிந்தது ? சுமார் 70 ஆண்டுகள் ; அதாவது இரண்டு தலைமுறை தான். அந்நியன் நம் நாட்டை விட்டு சென்றாலும் அவனது சுயநலம் எனும் விஷ விதை நம் நாட்டுக்குள் விழுந்து இன்று விருட்சமாக வளர்ந்து நிக்குது.
"அடிமை முடிந்தது; தீண்டாமை ஓய்ந்தது; ஏன்? ஜாதி கொடுமை கூட கொஞ்சம் குறைந்து விட்டது ; ஆனாலும் குறையாமல் நமக்குள் புற்று நோயாக நம் சமுதாயத்தை சுயநலமும் , சொத்து குவிப்பும், காசுக்காக எதையும் செய்யலாம் என்ற சிந்தனையும் நம்மை நிரந்தர நோயாளியாக மாற்றிவிட்டது.

நம்மின் கனவுகளுக்காக நாம் அடுத்தவரின் உணர்வுகளை மிதிக்கவும், தயங்குவதில்லை; என்று சொல்லி என்னையே குறு குறுன்னு பார்த்தாள்; "
"ஏய், என்ன நீ, என்னை பார்க்கற ? நான் என்ன செய்தேன் ? என்றேன்.
நல்லவேளை, சுருதி, எனக்கு குரல் கொடுத்தாள்; "அம்மா, அப்பா என்ன பண்ணாங்க " அவரை ஏன் முறைக்கற ?
"ஸ்ருதிம்மா, இப்போ தப்பெல்லாம் தப்பாக தெரிவதில்லை. உனக்கு, புரியும் படி சொல்லவா ?
இப்போ, உன் ஸ்கூல் ல , ஆரட்டோரிகல் காம்பெடிஷன் ல நீ ரொம்ப நல்லா பேசிட்டு உனக்கு தான் பரிசு கிடைக்கும்னு நினைக்கிற. ஆனால், ஒரு மிஸ் பையன் என்பதற்காக யாருக்கோ கொடுத்தால், உனக்கு எப்படி இருக்கும்? "
சுருதி , "அது எப்படி அம்மா ? எனக்கு கஷ்டமா இருக்கும். நான் போய் நேரா கேட்டுடுவேன் ; எனக்கு ஏன் தரலைன்னு ; " என்றாள்;

லட்சுமி " இப்போ, புரியுதா? திறமை இருந்தும், பரிசு கிடைக்கவில்லை என்ற வருத்தம் உனக்கு.
உங்க மிஸ் தன்னுடைய ஆசையை தன் பையன் மீது திணித்து அவனுக்கு திறமை இல்லையென்றாலும் ஜெயிக்க முடியும் என்ற தவறான எண்ணத்தை திணிக்கிறார்கள். " இது தான் இன்று நம் சமுதாயத்தின் நோய்"; உங்க அப்பா டாக்டர் தானே; அவரால் இதை சரி செய்ய இயலுமா ?"

சுருதி " இப்போ, அவங்க அப்பாவை பார்த்து ..' அப்பா. உங்க டர்ன் " சொல்லுங்க " என்றாள்.
நானோ "என்ன சொல்வது என்று தெரியாமல், இதுக்கு என்னை என்ன சொல்ல சொல்ற ? “என்றேன்.

லட்சுமி, " ஒரு நோயாளி, எப்படி நோயை குணமாக்க முடியும்? என்று அடுத்த கேள்வியை போட்டாள்; "

சுருதி, என்ன அம்மா ? அப்பாவை போய் நோயாளின்னு சொல்றீங்க ? " என்றாள்;

லட்சுமி , "பின்ன எப்படி சொல்றது ? நீயே சொல்லு.
உங்க அப்பா கனவு, டாக்டர் ஆகணும்னு ஆயாச்சு. சரி. உங்க அண்னன் ஆனந்தனை டாக்டர்ன்னு சொல்லியே வளர்த்து அவனும் அதே aim ல படித்து டாக்டர் ஆகிட்டான். " இதுவும் போதாதுன்னு,

"உனக்கு டிசைன்ங்கல தான் திறமை இருக்கு; உனக்கு அந்த துறை தான் பிடித்தும் இருக்கு;" உன்னோட கனவையும் கொன்னுட்டு, அவரோட ஆசைக்காக உனக்கும் ஒரு டாக்டர் சீட் யை எப்படியாவது வாங்கணும்னு
எல்லா வகையிலும் முயற்சி செய்றார். இதை என்ன சொல்ல ?
எங்கேயோ இருக்கும் யாரோ ஒருவரின் திறமையை அழித்து, மறைத்து, அவரின் இடத்தை பறிக்க முயல்வதா ?
மற்றவரின் வாழ்க்கையை உன்னை வாழ வைக்க நினைத்தால் இதுவும் நோய் தானே; "
"அடித்து பிடித்து பஸ்ல சீட் போடறது போல, நாம் முன்னுக்கு வரணும்னு மற்றவங்கள எப்போ கீழே தள்ளலாம் னு மனுஷன் நினைக்கலாமா ? "
அம்மாவின் அடுக்கடுக்கான கேள்விகளை சமாளிக்க முடியாமல்
சுருதி " இப்போது அமைதியானாள்; "
நானோ, வெட்கி தலை குனிந்தேன்; ஒரு மன நல மருத்துவர் சிந்திக்க வேண்டிய விஷயத்தை ஆன்மீகவாதி யான என் மனைவி சிம்பிள் ஆக சொல்லி விட்டாள்; ஆன்மீகம் என் மனைவிக்கு நல்ல விஷயங்களை எத்தனை தெளிவாக சொல்லி கொடுக்கிறது.
நான் என் மனைவியிடம் " உண்மை தான் மா. இத்தனை நாள் நானும் சுயநலமா தான் சிந்தித்துட்டேன்; கடவுள் எல்லோருக்கும் ஒவ்வொரு திறமை களை கொடுத்திருக்கிறார். எல்லா திறமைகளும் இந்த உலகத்தில் நிச்சயம் பயன் படணும். அப்போ தான் , இந்த உலகம் சம நிலையுடன் செயல் பட முடியும். ஒரு போதும் சதுரம் வட்டமாகாது; அதற்கு அவசியமும் இல்லை; வட்டம் வட்டம் தான். சதுரம் சதுரம் தான். தனது சீடர் மாணிக்க வாசகருக்காக நரியை பரியாக்கிய ஈசனே அதனை மறுநாளே மறையச் செய்திட்டாரேயொழிய பரியாக வாழ செய்யவில்லை. கடவுள் படைத்த ஒவ்வொரு உயிரும் ஒரு அற்புதம் தான். அதை கொண்டாட தெரியாமல் எல்லோரும் சேர்ந்து அந்த சின்ன பையன் சுஷாந்த்தை கொன்று விட்டோம்.
இனி நான் இந்த எளிய சிந்தனையை ஒரு சித்தாந்தமாக மனிதர் களுக்கு சொல்லி கொடுத்து மனிதனே தன் இனம் அழிக்கும் கொடுமையை நடக்க விடாமல் தடுக்க முயற்சி செய்வது தான் என் முதல் என் கடமை. " என்று சிரித்தேன்;
அம்மா "சிலிர்த்தார்; "நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க; ஒரு நிமிஷம் சுஷாந்த் அம்மா ஸ்தானத்தில் இருந்து சிந்தித்தேன். எந்த ஒரு தாய்க்கும் மகனின் இந்த முடிவு தீரா வருத்தம் தரும். இனி யாருக்கும் இந்த முடிவு ஏற்பட கூடாதுன்னு தான் தோணும். நானும் அதை தான் இன்று கோயில்ல நினைத்து கடவுளிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் தான் இது."
"படித்தவன் பாட்ட கெடுத்தான்; எழுதினவன் ஏட்டை கெடுத்தான் என்று நாம் நாளைய நம் தலை முறைக்கு பணம் செய்வது எப்படி என்று வெறும் பணம் மட்டுமே சொல்லி கொடுக்கிறோம். நம் மூதாதையர்கள் சொன்ன எதையும் நாம் அவர்களுக்கு சொல்லவே இல்லை";
" தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். நாமோ ? தனி ஒவ்வொருவனும் இந்த ஜகத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதை தடுக்காமல் இருக்கிறோம்."
என்ற என் லட்சுமியின் பேச்சை கேட்டு " ஒரு தமிழ் ஆசிரியர் மகள் என்பதை நிரூபிக்கிறாய் என்று புகழ ஆரம்பித்தேன்.
சுருதி, அப்பா, உங்க கொஞ்சல்ஸ் அப்பறம். உங்களிடம் என் நிலையை எப்படி சொல்றதுன்னு தவித்தேன்.
அம்மா எனக்கு ஈஸி ஆக்கிட்டார். தேங்க்ஸ் அம்மா ; இப்போ புகழ்வதை தொடருங்க. நான் போறேன்.
என்று சுருதி யும் அவள் கனவுகளை நினைவாக்கும் நோக்கில் சென்று விட்டாள்;

நானோ , மீண்டும் கனக்கும் மனதை , இன்னொரு சுஷாந்து நீதியின்றி மறைய கூடாது என்று சிந்தித்து " சாமானியனின் (சுஷாந்தின்-நடிகனின்) கனவு " என்ற தலைப்பில் ஒரு செமினார் தயார் செய்ய என் ரூம் யை நோக்கி சென்றேன். நம் அப்துல் கலாம் கனவு காண சொன்னார் - பிறர் கனவுகளை கலைக்க சொல்லவில்லை என்று முதல் வரியை எழுத ஆரம்பித்தேன்.

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (3-Jul-20, 7:17 pm)
சேர்த்தது : Samyuktha
பார்வை : 244

மேலே