நகைச்சுவை துணுக்குகள் 17

ஏண்டா, பல்லுலே வலிக்கிறமாதிரி இருக்கே. டாக்டர்கிட்டே காட்டினா பரவாயில்லைடா.

அம்மா, இது நம்ம ஊரு இல்லே நினைச்ச உடனே டாக்டரைப் போய்ப் பாக்கறதுக்கு. இது அமெரிக்கா. டாக்டர்கிட்டே முதல்லேயே அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவர் எப்ப வரச் சொல்றாரோ அப்பத்தான் அவரைப் பாக்க முடியும்.

இதென்னடா இது கூத்தா இருக்கு அப்பாயின்ட்மென்டும் அம்மாயின்மென்டும்? டாக்டருக்கு எப்ப சௌகரியமோ அப்பத்தான் எனக்குப் பல் வலி வரணுமா?
*************

இந்தக் கோவில் ரொம்பப் பழமையான கோவில். இதைக் கட்டி 700 வருஷம் 21 நாள் ஆகுது.


அதெப்படி அவ்வளவு கச்சிதமா சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்?


21 நாளைக்கு முன்னாடி நான் இங்கே வந்திருந்த போது கைட் இந்தக் கோவில் கட்டி 700 வருஷம் ஆகுதுன்னு எங்கிட்டே சொன்னார்.
**********

அமெரிக்கா!அமெரிக்கா!

உங்க ஊர்லே வினாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி, ராம நவமி இதை எல்லாம் எப்ப கொண்டாடுவீங்க?


எதுவாயிருந்தாலும் நாங்க அதை வீக் என்ட், அதாவது அந்தந்த வார சனி, ஞாயிறுகளிலே தான் கொண்டாடுவோம். நாங்க இந்த அஷ்டமி, நவமி, தசமியை எல்லாம் பாத்துக் கிட்டு இருக்க முடியாது. அதுதான் அமெரிக்கா. உங்க ஊர்லே கடவுள்களெல்லாம் லீவு நாட்களிலே பிறந்து இருக்காங்க. ஆனா எங்களுக்கு எல்லாம் அப்ப லீவு கிடையாதே.

அவர் சொல்றதும் நியாயம்தானே. அந்த ஊரைப் பொறுத்தவரையிலும் லீவு இல்லாத நாட்களிலே கடவுள்கள் பிறந்தா அவங்கதான் என்ன பண்ணுவாங்க?

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (4-Jul-20, 2:50 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 73

மேலே