பூக்களே பூக்காத பூந்தோட்டத்தில்
பூக்களே பூக்காத பூந்தோட்டத்தில்
அனுதாபத்தில் வந்தது தென்றல்
அதை அழகு செய்ய வந்தாய் நீ !
கலைந்திடும் கருங்கூந்தல் அழகைத் தழுவி
இதழோரத்தில் வந்து நன்றி சொன்னது தென்றல்
சொல்லவேண்டாம் என்று ஆங்கிலத்தில் சொல்லி
மென்மைமையாய் புன்னகையில் மறுத்தாய் நீ !