தென்றலில் ஆடுது தூக்கணாங் குருவிக்கூடு

தூக்கணாங் குருவிக்கூடு
மரக்கிளையில் தென்றலில் ஆடுது
உள்ளே துயில்கிறது குருவி
துயில் பறவையே
உன் கலைத் திறமைக்கு கலைமாமணி விருது
இன்னும் ஏன் வழங்கவில்லை இந்த அரசு ?
அரசும் துயில்கிறதோ !
அதற்காக நான் ஒரு போராட்டம் நடத்தவா ?

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-20, 9:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 346

மேலே