கதிரவன்
எழும் வேளையிலும் உன் முகம்
சிவக்கிறது.
விழும் வேளையிலும் உன் முகம்
சிவக்கிறது.
நிலாப் பெண்ணை
நாடி நீ தேடுவதால்,
நாணத்தில் சிவக்கிறதா?
வான்நிலா ஒளிந்து
விலகுவதால், சினந்து உன்
வதனம் சிவக்கிறதா?
இருவரும் ஓரிடம் இருந்தால்,
இன்பக் காதல் ஓங்கி வளரும்.
நீ இருந்தால் அவள் இல்லை.
அவள் இருந்தால் நீ இல்லை.
பரிதி, உன்னைக் காணாமல்
சில நேரம்,
பாதியாய் நிலா மெலிகிறது,
பார்த்தாயா?
காதல் இன்றியா, காயும் நிலா
கால்வாசியாய்க் குறைகிறது?
அறிந்து கொள் அவள் அங்கம்
நோதலை.
புரிந்து கொள் அவள் பொங்கும்
காதலை.
ச.தீபன்.
94435 51706.