மனம் பிழற்சியுற்றோர்

ஒட்டமும் நடையுமாய் எதற்கென்றே தெரியாமல்
மேலாடை அழுக்காயும் கிழிந்து தொங்கியவாறே
தடதடவென விழிகளிரண்டும் பதட்டதுடன்
ஆரோக்கிய உடலுடன் ஏதோ ஒரு மொழி பேசி
உணவும் நீரும் குறித்து யாதொரு கவலையின்றி
தலை நிறைய முடியோடு அத்தனையும் பிசுபிசுப்பாய்
உரமூட்ட உணவில்லை நோய் தாக்கும் அபாயமில்லை
எதையோ நோக்கியாவறு எந்நேரமும் சுறுசுறுப்பாய்
நகரங்களில் பல இடத்தில் நடமாடும் மனிதர்கள்
யாரென்று கேட்பதற்கு யாரும் முன்வருவதில்லை
இளமைத் தோற்றத்தோடு இப்போது பெண்களும்
இறைவா நீ இவர்களைப் படைத்து சாதித்தது என்ன?
- - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (7-Jul-20, 8:47 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 41

மேலே