கண்ணங்கருத்தவளே காதல் வந்தது

உன் விழி என்னைப் பார்க்க
என் மனம் குதுகலிக்க
விண்மீன்கள் பூச்சொரிய
கண்களிரண்டில் பொரிபறக்க
காணும் இடமெல்லாம் மலராய் தெரிய
காவியத் தலைவர்கள் வாழ்திசைக்க
கண்ணங்கருத்தவளே காதல் வந்தது உன்மேலே
செண்டை மேளங்கொட்டி
தெருவெல்லாம் தோரணம் கட்டி
பண்ணைபுரத்தானின் பரவச பாட்டிசைத்து
உன்னை கரம்பிடித்து ஊர்கோலம் வர ஆசையடி
ஊர் மெச்ச வாழ வேணும் ஒப்புதல் தாயேண்டி.
- - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (7-Jul-20, 9:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 61

மேலே