மூச்சுக்கூட உன்னை முறைக்கும்

சிற்றின்பம் இல்லையடா
புதைகுழி தான் காமம்
இறை தூதன் என்பவனும்
இரந்து தினம் திண்பவனும்
வாசியோகம் அறிந்தவனும்
வயிறு ஒட்டி கிடப்பவனும்
காம எண்ணம் வந்துவிட்டால்
கல்லில் கூட கலவி கொள்வான்

கையில் காசு இருந்ததென்றால்
கலவு தினமும் காலை வருடும்
காணும் யாவும் கண்ணில் மறையும்
காமமே எங்கும் முதலாய் தெரியும்
காசின் கனமோ தளர்வாய் போனால்
மூச்சுக்கூட உன்னை முறைக்கும்
சித்தம் சிதறும் சிறப்புகள் மாறும்
பித்தம் ஏறி பேயாய் அலைவாய்

காமம் என்பது காழிதலுக்காக
காதல் அதனின் ஒருவகை பாதை
கடந்தவர் வாழ்வார் சிறந்த வாழ்க்கை
நின்றவர் அடைவார் நீச்ச நிலையை
துணை வருவோரெல்லாம் தூபம் போடுவர்
துணிந்து இறங்கினால் தூக்கம் இழப்பாய்
ஆழ்ந்து உணர்ந்தால் அனைத்தும் மாயம்
அறிவால் ஆய்வது உத்தமமாகும்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Jul-20, 9:33 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 939

மேலே