ஒன்றுமில்லை
பள்ளிகள் கொள்ளையர்களின் கூடாரமானபின்
கல்விகள் கடைச்சரக்கானதில் கவலைப்படவொன்றுமில்லை!
மருத்துவமனை மரணத்தின் துணையென்றானபின்
மருந்துகள் விஷமானதில் வியப்பொன்றுமில்லை!
கோயில்கள் கொடியவர்களின் கைவசமானபின் கடவுள்கள் கல்லானதில் கற்பனையொன்றுமில்லை!
நோட்டில் நாட்டம் உள்ளவர்கள் நாட்டை ஆண்டபின்
நீதிகள் நிலைகுலைவதில் பீதியொன்றுமில்லை!
ஊடகம் உண்மையில் ஊமைகளானபின்
கேள்விகள் காணாமற்போனதில் கேளிக்கையொன்றுமில்லை!
மனிதர்கள் வாழஆசையின்றி ஆசைக்குவாழ்ந்தபின்
மிருகங்களாக மாறியதில் மிகையொன்றுமில்லை!