நகைச்சுவை துணுக்குகள் 17

என் பெண்டாட்டுக்கு பேய் பிடிச்சி இருக்குன்னு பூசாரி சொல்றார்.


ஆச்சரியமா இல்லே இருக்கு. ஒரு பேய் இன்னொரு பேயைப் பிடிக்குமா?
********************
நான் உங்கிட்டே கொடுத்த பாமை அந்தக் காருக்குள்ளே நான் சொன்ன இடத்திலே ஜாக்கிரதையா வெக்கணும். வெக்கும்போது பாம் வெடிக்காமல் பாத்துக்க. தப்பித்தவறி வெடிச்சிடுத்துன்னு வெச்சிக்க அப்புறம் அவ்வளவுதான்.


அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அதுக்காகத்தான் இன்னொரு பாம் நான் கையிலே எக்ஸ்ட்ராவா வெச்சிருக்கே
*************
இன்ஸ்பெக்டர் சார் என்னோட தொலைஞ்சி போன சைக்கிள் கிடைச்சுட்டுதா?

கிடைக்கலை. அதுக்குப் பதிலா வேறே ஒரு சைக்கிளை எடுத்துக்குங்க.

சரி சார். (அப்போது இன்னொருவர் வருகிறார்)

அவர்: இன்ஸ்பெக்டர் சார், காணாமப்போன என்னோடே மனைவி கிடைச்சிட்டாங்களா?

இல்லை.

பரவாயில்லை. இன்ஸ்பெக்டர். அவருக்கு வேறே ஒரு சைக்கிள் தந்த மாதிரி எனக்கு வேறே யாரையாவது கொடுத்தாக் கூடப் போதும
**************
அந்த டாக்டர் ஒண்ணும் சரியில்லை.


ஏன்?


நேத்து அவரைப் பார்க்கப் போயிருந்தபோது என்னை டெஸ்ட் பண்ணிட்டு எனக்கு இருக்கிற இந்தக் கோளாறுக்குக் காரணமே ஜீன்ஸ் தான். உங்க அப்பாவோ, அம்மாவோ இல்லை தாத்தா, பாட்டி இல்லை அவங்க அப்பா, அம்மா இப்படி யாருடைய ஜீன்ஸுலேயாவது இந்தக் கோளாறு இருந்திருக்கலாம்னு சொன்னார். எங்க வீட்டிலே ஜீன்ஸ் போட்டுக்கற பழக்கம் என்னைத்தவிர இதுவரையிலும் வேறு யாருக்குமே இருந்ததில்லைன்னு சொன்னேன். ஜீன்ஸ் போட்டுக்கிறதுலே என்ன கோளாறுன்னு எனக்குப் புரியல்லே. கேட்டா டாக்டர் சிரிக்கிறாரு.
*********

எழுதியவர் : ரா.குருசுவாமி (ராகு) (11-Jul-20, 3:42 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 125

சிறந்த நகைச்சுவைகள்

மேலே