ஹைக்கூ

பாத்திரம் தேய்க்கத்தேய்க்க
கறுத்துப் போகிறது
வேலைக்கார சிறுமியின் முகம்.
**
குடித்து நிதானமில்லாமல்
வந்த வீட்டுக்காரனுக்கும்
வாலாட்டுகிறது நாய்
**
குடும்பக்கட்டுப்பாடு நிலையத்திற்குள்
வசித்தும் கண்மூடித்தனமாகப்
பெற்றெடுத்திருக்கிறது எலி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Jul-20, 1:41 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 93

மேலே