அதுவெனஇதுவென

#அதுவென.. இதுவென..

சீனத் தானவன் சிறுமதி யதனால்
சீர்கெடும் பூவுலகம்
பானம் எய்தார் பாழ்நோய் கொண்டு
பாரினில் பலமரணம்..!

தும்மல் வந்தால் தூர ஓட்டம்
அதுவென்றார் மாயநோய்
இம்மி யளவு இருமல் காய்ச்சல்
இதுவென்றார் மாயநோய்..!

வாசம் மறக்க வாய்ருசி இழப்பின்
அதுவென்றார் மாயநோய்
நாசம் தொண்டையில் நசுங்கும் மூச்சும்
இதுவென்றார் மாயநோய்..!

பலகீன மதனால் படுக்கையில் வீழ
அதுவென்றார் மாயநோய்
வலமிடம் சிரமென வலிகள் கண்டால்
இதுவென்றார் மாயநோய்..!

இதுவென அதுவென எதுவரி னதனை
இன்னல் நோயென்றார்
புதுவித நோய்க்குப் புவியில் மருந்து
புலப்படாதுப் போய்ச்சேர்ந்தார்..!

கபசுரக் குடிநீர் குடித்துப் பலரும்
காக்கின்றார் உயிரை
உபயம் புதிதாய் உண்டா வதற்கும்
வகுகின்றார் வழியை..!

எங்கும் இடைவெளி எதிலும் விலகல்
இருந்திடக் கற்கின்றார்
தங்களைக் காக்கத் தனிமைப் பட்டுப்
பிணியினைக் கொல்கின்றார்..!

வென்றோம் பலரிடர் வேருடன் களைந்தே
வெல்வோம் இவ்விடரும்
இன்பங்கள் கொய்யும் இருள் நோயதனை
இருட்டினுள் உருட்டிடுவோம்..!

எல்லா மிருந்தும் இல்லை மருந்து
என்றோ கிட்டுந்தான்..?
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிட
இன்னல் தீர்ந்திடுந்தான்..!

அதுவென இதுவென ஐயம் போக்கி
ஆவன செய்திடுவோம்
இதுநாள் சோதனை இனிமே லடங்கும்
இறைவனைத் தொழுதிடவே..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (13-Jul-20, 9:43 pm)
பார்வை : 260

மேலே