என் காதலி
என் பள்ளி பருவம்
முடிந்தது...
பருவ வயது
துவங்கியது ...! !
ஆம்...!
காதல் செய்யும்
பருவ வயது
துவங்கியது....! !
நானும் ஓரு பெண்ணை
காதலித்தேன்...! !
திருமணம் செய்து
கொள்ளவில்லை...! !
ஆனாலும்...!
இன்னும் அவளுடன்தான்
வாழ்கிறேன்...! !
அவள் ஓரு லட் சிய பெண்...
சில சமயங்களில்
புரட் சி பெண்...! !
எங்களுக்குள்
அடிக்கடி
கருத்து மோதல்கள்
வரும்...! !
முடிவில்....
ஓரு "கவிதை" யை
பரிசாக கொடுப்பாள்...! !
யார் அந்த பெண்...?
சொல்லத்தான்
நினைக்கிறேன்...! !
வேண்டாம்....வேண்டாம்...!
அவள் என்னுள்
ரகசியமாக இருக்கட்டும்...! !
--கோவை சுபா