கவிதை🌹

கவிதை🌹

பூக்களின் தொகுப்பு மாலை
வார்த்தை ஜாலங்களின்  தொகுப்பு கவிதை
கல்லை செதுக்கினால் அது சிற்பம்
எண்ணத்தை செதுக்கினால் அது கவிதை.
பெண்ணின் அழகு அவள் நாணத்தில்
கவிதையின் அழகு அதன் அற்புத வரிகளில்
நீரின் மேன்மை கொட்டும் அருவியில்
கவிதையின் மேன்மை அதன் கருவில்
காதலின் அச்சாரம் அது முத்தம்
கவிதையின் அச்சாரம் அது அதன் தலைப்பு
பெண்மை முழுமை அடைவது அவள்  தாய்மையில்
கவிதை முழுமை அடைவது அதன் ழொழி ஆளுமையில்
புடவை உடுத்தினால் அது பெண்களுக்கு அழகு
'தமிழ்' கவிதைக்கு உடுத்தினால்  அது கவிதைக்கு பேரழகு.
- பாலு.

எழுதியவர் : பாலு (10-Jul-20, 10:27 pm)
பார்வை : 292

மேலே