இயற்கை
காய்த்து காய்த்து தொங்கும்
மா பலா என்கின்ற மரங்கள்
ஏராளம் ஏராளம் இவை
காய்க்கும் இக்காய்கள் அத்தனையும்
நமக்கே தந்து விடுகின்றன
தமக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாது
தாமும் அவற்றை சுவைக்கவும் இல்லாமல்....
தியாகப் பெருந்தகைகள் இவை
ஓடும் நதிகள் ......
நீரெல்லாம் நமக்கே நம்மை வாழவைக்கவே
என்று ஓடிக்கொன்றே இருக்கும் நதிகள்
நாம் சேர்க்கும் கழிவையும் பொருட்படுத்தாது
அதையும் தன்னுள் வாங்கி நன்னீராய்
நமக்களிக்கும் நதிகள்....
ஒரு சொட்டு நீரையும் தாம் குடிக்கவில்லையே
நதிகள்...... பூரண தியாகிகள்
நம்மை வாழவைக்கும் தாய் நதி
கடல்......
ஓயாது இரையும் அலைகள்
ஓமென்ற நாமம் எழுப்பி
நம் மனதில் தூய்மை சேர்க்க
தன்னையே நம்பி இருக்கும்
மீனவர்க்கு அல்லி அல்லி தரும்
வித விதமான மீன்கள்
ஆழ்கடலோ மூழ்கி எழுவோர்க்கு
வெண் முத்து நல்முத்து தரும்
இன்னும் பவளமும் .... நம்மை
வாழவைக்கும் உப்பும் /.......
கடலெனும் தியாகி
வணங்குவோம், துதிப்போமே
கடல் தன்னீரை
குடித்ததுமுண்டோ கூறுங்கள்
கடலெனும் இயற்கைத் தியாகி
வாழ்த்துவோம் வணங்குவோம்