எழுந்திரு என் தோழி

தோழியே !!!

சோதனை உலகில்
சாதிக்க நினைப்பது
சாதாரணம் அன்று!

ஆதி சக்தியே !
ஆணில் பாதியே!

முழுமதியின் வெளிச்சத்திலும்
நீ முகம் திருப்புவது ஏன் ?
கருத்த மேகமாய்
உன் மனம்
சோக சுற்றுலா செல்லுமாயின்
வாழ்வில் எப்படி நீ வகை சூடுவாய்?

சோதனை உலகில்
சாதனை படைக்க
கேள் தோழி !!!

அறியாமை நித்திரை களை
கோடி சூரியன் ஒளிர
உன் ஜோடி கண்கள் திற
மூலையில் முடங்கியது போதும்
முளைத்து எழு!!

பெண் என்பதே
மென்மை தான்!!!
பூப்பறிக்கும் உன்
விரல்களுக்கு வாள் பிடிக்கும்
வலிமையும் உண்டு!!!

வேதனை தாங்கும்
மனமும் வேலினும் கூறிய
விழிப்பும் உண்டு !!!

அச்சம்...
மடம்...
நாணம்...
எல்லாம் இருக்கட்டும் !
இருப்பினும் ரொவ்த்திரம் பழகு !!!

அடுக்களை துடைப்பதும்
படுக்கையை விரிப்பதும்
மட்டுமல்ல உன் வேலை!

வேதனை துடைப்பதும்
சாதனை படைப்பதும்
உனது வேலை தான் !!!

மாதர் தம்மை இழிவு
செய்யும் மடமை கொழுத்து

பார் புகழும்
பாரதியின் மகள்களே !!!
போனது விடுத்து பொன்முடி சூடு
நாளைய சாதனை உலகில்
சரித்திரம் படைப்போம் !!!

எழுதியவர் : வெண்ணிலா பாரதி (எ) பாக்கிய (16-Jul-20, 3:19 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
பார்வை : 71

மேலே