தனிதன்மை 💥🔥

தனிதன்னை💥🔥


உறவுகளே ஒரு நிமிடம்
ஒரே ஒரு நிமிடம்
நில்லுங்கள்!!
நிதானமாக கேளுங்கள்
ஏன் பதட்டம்
ஏன் பரபரப்பு
ஏன் கவலை
ஏன் மன அழுத்தம்
எல்லாம் ஆசையால் வந்தது
ஆசை பட்டது யார்
நீங்கள் தானே
பின் ஏன் இந்த விரக்தி
நான் உங்கள் ஆசையை தூக்கி எரிய சொல்லில்லை
நான் அபிலாஷைகளை
அழிக்க சொல்லவில்லை
உங்கள் எல்லையை நிச்சயம் நீங்கள் அடைய வேண்டுமா
முதலில் நீங்கள் நீங்களாக இருக்க பழகுங்கள்
யாரையும் பின் பற்றாதீர்கள்
உற்சாகதுடன் உங்கள் அறிவை பட்டை தீட்டுங்கள்
உங்களால் நீங்கள் எண்ணியதை நிச்சயம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை தூண்களை மனதில் விதையுங்கள்
மேற்கொண்ட லட்சியத்தை அடைய அதீத விருப்பத்துடன் செயல்படுங்கள்
ஆயிரம் வேலை இருந்தாலும்
உங்களை நேசிப்பவர்களிடம் தினமும் பேசுங்கள்
அறிமுகம் இல்லாதவர்களிடம் அன்பு செலுத்துங்கள்
நல்ல இசையை கேளுங்கள்
இயற்கையை அனு தினமும் ரசியுங்கள்
திறமையை பாராட்டுங்கள்
ஒரு போதும் கோபம் படாதீர்கள்
யாரையும் புண்படுத்தி பேசாதீர்கள்
வயது வித்தியாசம் இன்றி அனைவரிடமும் புன்னகையுடன் பேசுங்கள்
வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ளவர்களை தேடி சென்று உதவுங்கள்
உங்களை உளமாற நேசியுங்கள்
உற்சாகமாக நிமிர்ந்து நடக்க பழகுங்கள்
எதையும் சாதிக்கலாம்
எதையும் அடையலாம்
மனதில் அன்பை நாளும் சேமித்தால்
வாழ்க்கை என்றும் வசந்தமே
வாழ்க்கை இறைவன் கொடுத்த வரமே
வாழ்க்கை ஒரு பூந்தோட்டமே
வாழ்க்கையை நேசிக்க கற்றுகொண்டால்.

- பாலு..

எழுதியவர் : பாலு (18-Jul-20, 5:07 pm)
சேர்த்தது : balu
பார்வை : 234

மேலே