திருநங்கை

ஆணோ நீ பெண்ணோ நீ ஆணவம் இல்லா அழகே நீ
சிவனோ நீ சக்தியோ நீ சரிபாதி கொண்ட அர்த்தநாரியும் நீ
திடமோ நீ தீர்க்கமோ நீ தன்னலம் பாரா தைரியம் நீ
அலையோ நீ ஆழ்கடலோ நீ அடர்ந்து விரிந்த அலைகடல் நீ
சாதுர்யமோ நீ சஞ்சலமோ நீ எங்கும் நிறைய வேண்டிய சமத்துவம் நீ
வெறும் உடலா நீ வெற்று உயிரா நீ உணர்ச்சிகள் நிறைந்த உணர்வும் நீ
இருள் மதியா நீ சுடும் பணியா நீ எங்கும் பரவிக்கிடக்கும் கதிரின் வெளிச்சம் நீ
செம்மொழியோ நீ சிதைந்த ஒலியோ நீ மௌனம் பேசும் அழகிய சப்தம் நீ
வெறுப்போ நீ வேந்தனையோ நீ எல்லாம் மறைத்து சிதறிக்கிடக்கும் புன்னகை நீ
வேற்றுகிரக வாசியை வலைவிரித்து தேடும் வளர்ந்த பூவுலகில்
வேற்று பாலினம் என உன்னை வெறுத்திடும் இதயம் மத்தியில்
கைதட்டும் அவளின் வளைவுகள் தெரியும் நமக்கு
அவளின் உதடுகளில் மறந்து கண்ணாம்பூச்சி ஆடும் வலிகள் தெரிவதில்லை
உணர்வுகள் கொண்ட பிண்டமாய் அலையும் அவளும் ஒரு உயிரே
கல்வெட்டில் பொறிக்கப்படாத சித்திரம் அவளே திருநங்கை.

எழுதியவர் : ஹேமாவதி (19-Jul-20, 2:40 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : thirunangai
பார்வை : 45

மேலே