காதல்🌹
காதல் 🌹
பூத்து குலுங்கும் நந்தவனத்தில் தென்றலாக வந்து என்னை வியப்பில் ஆழ்த்திய மங்கையே
உன் மோகன பார்வையால் பரிதவித்து போனதே என் மனது
கன்னியே இந்த காளையை உன் ஒரு நொடி காந்த பார்வையால் சுண்டி இழுத்து விட்டாயே
இன்பம் ததும்பம் மது குடமே
உன் தாமரை பாதம் தரை மீது பட்டால் வலிக்கும் என உனக்காக நான் பூப்பாதை அமைத்துள்ளேன் அதன் மேல் நடந்து வா
ஆயிரம் மலர்கள் தரை மீது கொட்டி கிடந்தாலும், உன் அழகிடம் அத்துனையும் தோற்று போகும்
வென்னிலவே கால் முளைத்து நடந்து வரும் அதிசயமே
வேகமாக நடக்காதே உன் கொடி இடை ஒடிந்து போகபோகிறது
மின்சார பூவே
ஜொலிக்கும் நட்சத்திரமே
ஆனந்த பரவாகமே
அப்பப்பா! ஒட்டு மொத்த அழகையும் சுமந்து நிற்கும் தேவதையே!
என் சொல்வேன்
ஒரே வார்த்தை
ஒற்றை சொல்
மூன்று எழுத்து மந்திரம்
'காதல்'
செய்வொம்.... சங்க தமிழராக....
- பாலு.