அவள் கண்கள்

என் முன்னே நீ
உன் கண்கள் மூடி
மூடிய கண்களில்
மௌனம் மோனம்
திறந்து உன் கண்கள்
என்னைப் பார்க்கையிலே
இமைகள் மூடி திறக்க
கருமணிகள் கயலாய்த் துள்ள
கவிஞன் நான் புன்னகைக் காண்கின்றேன்
மீண்டும் பார்க்கின்றேன் உந்தன்
கண்களில் ஓர் விஷமச்சிரிப்பு
குழந்தையின் கபடச்சிரிப்பு
மீண்டும் பார்க்கின்றேன் அதில்
காதலின் மந்தஹாசம்
இதோ இதோ இந்தப் பார்வை
உனக்கு மட்டும்தான் என்பதுபோல்
காண்கின்றேன் நான் ............
காவியக் கலையின் பிறப்பிடமா
பெண்ணே உந்தன் காந்த விழிகள்
பெண்ணிற்கு அழகு பெட்டகம்
அவள் இரு விழிகள் இதனாலோ !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-20, 7:41 am)
Tanglish : aval kangal
பார்வை : 267

மேலே