முகநூல் பதிவு 44

அந்த நாற்பது பேருக்கு நன்றி 🙏!

எங்கள் ஆலடிப்பட்டிக்கு அருகாமையில் உள்ளது குறிப்பங்குளம் கிராமம் ...
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அழகிய கிராமம் ....

அந்த ஊருக்கு என்ன என்று கேட்கிறீர்களா...?
அறுபதாண்டுகாலமாக இந்த ஊரில் தூர்ந்துப்போய் கிடந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது... அதுவும் இந்த கடுமையான கொரோனா காலத்தில்....
A.திலகராஜ் என்னும் சுற்றுச்சூழல் பாதுகாவலர், இளந்தளிர் இயக்கம் மற்றும் தன்னார்வத் தொண்டு இளைஞர்கள் மற்றும் கொரோனா தொற்றுக்கு பயந்து சொந்த ஊரில் அடைக்கலம் புகுந்தவர்கள் என நாற்பது பேர் கரம் சேர்ந்து...
இரவு பகல் பாராது பதினொரு நாட்கள் கடுமையாய் வேலைசெய்து .... தங்கள் ஊரில் உள்ள குளத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி...
அடர்ந்து வளர்ந்து கிடந்த சீமை கருவேலமரங்களை வெட்டி, கழிமண் கற்களுடன் அடைந்த படிவுகளை பெயர்த்து.... குளத்தை ஆழப்படுத்தியுள்ளனர்....இதற்கான செலவு 35 ஆயிரம்....
முன்பு குற்றாலத்தில் இருந்து வரும் நீர் இந்தக் குளத்தில் சேமிக்கப்பட்டு... அருகில் உள்ள கிராம மக்களின் விவசாயத்திற்கும் , குடி நீருக்கும் பயன்பட்டு வந்துள்ளது... குளம் தூர்ந்துபோனதால் பயனற்றுப் பல ஆண்டுகளாக வனப்பிழந்து , நீர் வரத்தின்றி கிடந்தது....

இன்று மீண்டும் பொலிவுடன் புதுமணப்பெண்ணாய் நீர்வரவிற்காய் காத்திருக்கிறது.... ஊர் மக்களும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இதை சாத்தியமாக்கிய அந்த நாற்பது பேருக்கும் என் நன்றிகள்.....உடனிருந்து ஊக்குவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்... பொருளாதார ரீதியாய் உதிவிக்கரம் நீட்டிய தர்ம சிந்தை உடையோர்க்கும், பக்கபலமாய் நின்ற அன்புச் சகோதரி பூங்கோதை ஆலடி அருணா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

ஏன் இதை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு.... அனைத்து ஊர் மக்களும் தங்கள் பகுதியில் தூர்ந்துபோன குளம் குட்டைகளை தூரெடுத்து,ஆழப்படுத்தக் கூடாது...?
மத்திய அரசின் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்... இதுபோன்ற செயல்களை செய்ய ஊர் மக்களை ஏன் ஊக்குவிக்கக் கூடாது...?
சென்னையில் கொரோனாவால் பிழைப்பின்றி ஊர் பக்கம் ஒதுங்கியவர்களுக்கும் மறுவாழ்வு கொடுத்ததாய் இருக்கும்..... பருவ மழை தொடங்கும் முன்பே நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுவிடும்.... வரும் காலங்கள் வறட்சி இன்றி.... பிரதமர் மோடியின் பசுமை இந்தியா துளிர்விடும்!

எழுதியவர் : வை.அமுதா (23-Jul-20, 7:31 am)
பார்வை : 25

மேலே