நோயை எதிர்க்க திறனின்றி
மனித மரணம் தினமுமே கிரீட நோயால் நிகழுது
மதியில் சிறந்த மனிதர்கள் மதிக்காமலே திரியுது
சத்து மிகுந்த உணவினை உண்ணத் தடுத்த கூட்டமும்
குப்பை உணவின் குவியலை உற்பத்திச் செய்த கூட்டமும்
நோயை எதிர்க்க திறனின்றி மருந்து பின்னால் மறையுது
மண்ணு சார்ந்த உணவினால் மகத்தும் ஏதும் இல்லையென்று
மருத்துவம் படித்த மந்திகளால் சொன்ன வார்த்தையை நம்பியே
மாவு பொருளின் நஞ்சு உணவுகளை மாதக்கணக்கில் உண்டதால்
நோவு கொண்ட உடலோடு நோயின்றி வாழ்வதே நோக்கமாக போனது
நூல் அளவுக்கும் நோயை எதிர்க்காமல் உடல் நோஞ்சானாய் ஆனது
அம்மைக்கும் போலியோவிற்கும் ஆளைக் கொல்லும் காசத்திற்கும்
அலோபதிதான் மருந்தைத் தந்ததாய் ஆர்ப்பரிக்கும் கூட்டமே
இயற்கை முறை நோயினை எதிர்க்க மருந்து எங்கும் கிடைக்கலாம்
செயற்கையாக நோயினை செய்த துரோக கூட்டத்தின்
செய்கையினை பொசுக்கவோ தமிழ் மண்ணின் உணவே மருந்தேயாம்.
--------- நன்னாடன்.