தீதிலும் நன்றாய் நன்றிலும் தீதாய்

தீதிலும் நன்றாய்! நன்றிலும் தீதாய்!
செம்மெய் துளைத்தும்
சுரம் கொடுக்கும்
சிறு முங்கிலும்
தன் மெய் எரித்தும்
உலை ஏற்றும்
சிறு சுள்ளியும்
உளி வாங்கி
உடல் சிதறி
சிலை தள்ளும் கருங்கல்லும்
பால் கொடுத்தும்
உயிர் குடிக்கும்
பாசக் கள்ளியும்
இட்டதை அடைகாத்து
இரையாக்கும்
அரவங்களும்
ஒளி சிந்தி
சிற்றுயிர் அள்ளும்
அகல் விளக்கும்
உணவூட்டிய இலையை
உரமாக்கிக் கொள்ளும்
மரங்களும் செப்பிடுதே
தீதிலும் நன்றாய்
நன்றிலும் தீதாய்
நகர்ந்து செல்வது தான்
வாழ்க்கையென!