தொற்றுக்கு வைப்போம் முற்று

நாடோடியாய் நாடுவிட்டு நாடு,
மனிதன்விட்டு மனிதன் தொற்றி,
இறுதியில் என்னிடம்(தமிழ்நாடு) வந்துள்ளாய்.....
நீ தந்தவை ஏராளம்!...
விடுமுறையை விருந்தளித்தாய்,
ஊதியத்தை உயர்த்தி ஊக்கப்படுத்தினாய்,
ஓய்வுகாணா உலகை ஓய்வில் ஆழ்த்தினாய்,
இயற்கையை இயல்பாக்கினாய்,
என் பண்பாட்டை எனக்கே பரிசளித்தாய்,
இவற்றை தந்துவிட்டு,என்
இன்னுயிரை பரிசாய்
வேண்டுகிறாய்.....
மருத்துவம் வியாபாரம்,
அரசியல் சாக்கடை,
துப்புரவு அசிங்கம் என்றோரை
தெய்வமாய் கும்பிடவைத்தாய்...
இருப்பினும்,
இவ்வுலகில் நீ பிரவேசித்தால்,
இடுகாடு உலகமாகும்..
நாங்கள் கண்ட தொற்றுக்கள் எண்ணற்றவை
அவைகளில் நீயும் ஒன்று!
உன்னை முறம் கொண்டு முற்றத்தில் அடித்து,
முற்று பெற வைப்போம்!!!

எழுதியவர் : லிகோ (25-Jul-20, 6:21 pm)
பார்வை : 800

மேலே