காதல் ♥️♥️

காதல்❤

உன்னைக் கடக்காத மானுடம், மானுடம் அல்ல.
உன்னை நேசிக்காத மனிதர்கள், மனிதர்கள் அல்ல.
உன்னை உரசாத இளமை, இளமை அல்ல.
உன்னை நினைக்காத நெஞ்சம், நெஞ்சம் அல்ல.
உன்னைச் சுமக்காத இதயம், இதயம் அல்ல.

உணர்வுகளின் உன்னதம் காதல்.
மானுடத்தின் மகோன்னதம் காதல்.
இளமையின் உயிர் நாடி காதல்.
இல்லறத்தின் நல்லறம் காதல்.

உன்னைச் சுவாசித்த சிலர்
சிலாகித்து இல்லறத்தில் இனைந்து நல்லறம் பயில்கின்றனர்.
உன்னைப் போற்றிய பலர் தோல்வியைத் தழுவி இலக்கியத்தில் இடம்பெற்றனர்.

காதலே நீ என்றும் தோற்றதும் இல்லை.
ஜெயித்ததும் இல்லை.
இங்கே தோற்பதும், ஜெயிப்பதும் மானுடம் தான்.

காதலே நீ! என்றும் பூத்துக் குலுங்கும் நந்தவனமாய்,
வாசம் நிறைந்த மலராய்,
என்றென்றும் மனிதக்குல மாணிக்கமாய்,
உலக மனித இதயங்களில் நிரந்தரமாக நீங்கா
இடம் பெற்றுவிட்டாய்.

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Jul-20, 10:22 pm)
சேர்த்தது : balu
பார்வை : 172

மேலே