காந்தப்பார்வை💕

காந்தப்பார்வை 💕


கண்களால் இதயத்தைக் கலங்கடித்த
காவிய நாயகியே
மீன்கள் என்று தூண்டில் போட்டேன்
சிக்கியது மீன் அல்ல
நான் தான்.

சிற்றிடை கொண்டு சிங்கார நடை பயிலும் வண்ண மயிலே!
உன் சின்ன சிவப்பு இதழில் தேன் குடிக்கவா.
பளபளக்கும் உன் கண்ணத்தில் விழும் அழகிய குழியில் பல்லாங்குழி விளையாடவா.
அம்பாகச் செயல்படும்
உன் விழிகளுக்கு
என் விரல் கொண்டு
மை தீட்டவா
அலங்கார தேர் போல்
அசைந்து வரும் அதிசயமே
என் கரம் கொண்டு உன் இல்லாத இடைதனை வளைத்து
உணை என்னுடன் அனைத்து
பல மாயங்கள்
சொல்லித் தரவா
வெட்கம் தவிர்த்து அருகில் வா
காதல் கவிதைதனை
உன் காதில் கூறாமல்
உன் இதழ்களில் எழுதுவேன்.
நாணத்தில் என் தோள் மீது படர்ந்து மலர்க்கொடியே!
வண்டாக மாறிய நான் தேன் குடிக்க
தென்றல் அது இருவரையும் ஆரத் தழுவ
இனியதொரு இன்னிசை இங்கே அரங்கேற
சூழ்நிலை கைதியாக நீயும் நானும்
சுகமான இந்த தருணம்
பக்குவமான நேரம்.
பகிர்ந்து கொண்ட இந்த முதல் இன்பம்
பல்லாயிரம் ஆண்டானாலும் மறக்காது.
மறவாது
வாழ்க காதல்.
காதல் செய்தால் வாழ்க்கை இனிக்கும்.

- பாலு.

எழுதியவர் : பாலு (25-Jul-20, 10:44 pm)
சேர்த்தது : balu
பார்வை : 248

மேலே