உன் புன்னகை
மொட்டாய் இன்னும் மலரா பூவாய்
குவிந்த உன் அதரத்தில் நீ சிந்திய
புன்னகையில் புதைந்திருக்கும்
அர்த்தங்கள் ஒவ்வொன்றும் மொட்டலர்ந்த
பூவாய் மாறிய உன் இதழ்கள் ஒவ்வொன்றாய்
புலப்படுத்த அர்த்தபுஷ்டியானது
உன் புன்னகையே பெண்ணே