காதல் பிச்சைக்காரன்
![](https://eluthu.com/images/loading.gif)
முன்னெப்பொழுதும்
முயலாத அளவில்
முயன்று பார்க்கப் போகிறேன்
முடிவிலா உந்தன்
அழகின் ஆழத்தை.
விழிகளில் வடிந்து
இமைகளில் தேங்கி
கன்னம் தொடும்
கண்ணீராகவாவது
கடைசி வரை உடன் இருக்க
காதலியே அனுமதி கொடு
திசை மாறி பறந்தாலும்
கூட்டை அடைவதற்கு
வேட்கையுடன் திரியும்
சிறு குருவி போல்
உன்னைத்தேடி
உருகிடும் எனது உயிர்
தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லா
பிச்சைக்காரன் போல்
இதயத் தட்டில் விழும்
உன் காதலுக்காக
காலமெல்லாம் காத்திருப்பேன்.
///---///---///
மருத கருப்பு.