அவள்

கன்னியவள் முகமோ சிவப்பு தாமரைப்பூ
கண்ணி யவள் கண்களிரண்டும் துள்ளும் கயலிரண்டு
கன்னியவள் கன்னமிரண்டும் செந்தூர மாம் பழமோ
மூடிய அவள் இதழிரண்டும் கோவைப்பழமோ
விரிந்திடும் அவ்விதழ்கள் அவள் சிரிக்கையிலே
அங்கு தெரிகிறதே கன்னத்தில் குழி இரண்டு -மற்றோர் காட்சி

இதழ்களுக்குள் முல்லைச்சரமோ எனும் வெண்பற்கள் வரிசை
இதோ என் இதயம் அவள் கன்னக்குழிக்குள்
மூடிய அவள் இதயத்தில் என்னை இழுத்துச்செல்ல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jul-20, 5:10 pm)
Tanglish : aval
பார்வை : 218

மேலே