அழகிய ரதம்
அவளின் எண்ணம் மட்டும்
என் உள்ளத்தில் உலா வருகிறது
அவள் உள்ளத்திலும்
என் எண்ணம் உலா வருமா/
காதல் எனும் அழகிய ரதம்
இதயத்தில்
மெதுவாக ஊர்ந்து செல்கின்றது
இதமான எண்ணங்கள் அதில்
அழகாக பவனி வருகின்றது
தெளிந்த நீரில் தெரிகின்ற
உருவம் போல்
எண்ணம் எனும் நீரோடையில்
நீந்துகின்றோம்
சலனம் எதுவுமின்றி சங்கமிக்கும்
சந்தோஷங்கள்
இது அதிசயம், அதிசயமே