ஐயம்

எம்மொழியே சிறந்தது
என்றதனால்
ஆறறிவு மனிதரிடையே
அடிதடி.
எத்தனை பறவைகள்
எத்தனை விலங்குகள்
அத்தனை மொழிகள்
இருந்தும்
அவையிடையே இல்லை
அடிதடி.
ஐயறிவா
பறவைக்கும் விலங்குக்கும்.
ஐயுறவு தோன்றியது
ஆர் அறிவுடையோர் என்று.

‌‌ - தீ..கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (6-Aug-20, 11:10 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : aiyam
பார்வை : 54

மேலே