கலைவாணி துதி-2 ஆசிரியப்பா
வெண்கல யுடுத்தி வீணையைக் கையிலேந்தி
வெண்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் நாயகியே
நான்முகன் தேவியே வாணி கலைதெய்வமே
நானெழுதும் கவிதை அடிகnளில் ஒருபோதும்
பிறர்மனதை தாக்கும் வார்த்தைகள் வருதல்
நேராது இருத்தல் வேண்டும் அம்மா
பிழையற்ற பாக்கள் எழுதிட வேண்டுமம்மா