புலவருக்கு பொய்யுரை ஏன்
தெளிதமிழ் ஆசிரியருக்கு வணக்கம்
உங்கள் இதழில் பலபெரும் புலவர்களின் அரும்பெரும் கருத்துக்களை சொல்வது
மிகவும் இனிமையாக உள்ளது. அதே சமயம் அப்பாடலை இயற்றிய புலவர் சொல்லாத
கருத்தையெல்லாம் உங்கள் விளக்கத்தில் ஏன்? எதற்கு சொல்லி அப்பாடலின்
நோக்கத்தை வீணடித்து தமிழரின் மனதையும் குழப்பிப் புண் ஆக்கவிடுகிறீர். இலக்கியன்
என்பவருக்கு சாணக்கிய சாஸ்திரம் தெரிந்தது போலவும் மனு சாஸ்திரம் அறிந்தவர்
போலவும் ஏதேதோ சொல்கிறார். அவர் படித்த வட மொழி சாத்திரங்கள் என்ன?
அவருக்கு ஒரு சாத்திரமும் தெரியாது என்பதை நாம் அறிவோம். மற்றவரும் அவரைவிட
அதிகம் படித்தவரே. என்ன தமிழில்கொஞ்சம் அதிகம் படித்திருப்பார்கள். அவரைவிட
உண்மையில் மற்றவர்சரித்திரம் அதிகம் படித்தவர்களே. பெரியாரையும் அண்ணவையும்
நேரில் பார்த்தவர்கள்.மேடையில் அவர்கள் பேச வாத்திமார்களே ஏற்பாடு செய்தனர்
வசூல் செய்து அவர்களுக்கு சாப்பாட்டிற்கு வழி கண்டவர்கள்.
இருவிகற்ப நேரிசை வெண்பா
புலவர் கருத்தை புகுத்தா விடுத்து
கலப்பதேன்சாத்திர அர்த்தம் -- பலதும்
அவரின் கருத்தை தவறாசொல் போதும்
எவர்கருத்தை யும்புகுத்தல் ஏன்
வெள்ளெருக் காருடன் தும்பிசேர் கீரனார்
பிள்ளையிலாக் கைம்பெண் மெழுகிப்பின் --- வெள்ளமுதின்
ஈன்சிறுபிண் டம்படைத்தாள் காதலால் என்றாரே
மேன்மை பிசகே துசொல்
நேரிசை ஆசியப்பா
இருபெரு புலவரும் தென்புலம் ஏற்றார்
பெருமை வள்ளுவர் பெறுமா னுக்கே
பெண்ணேப் பிண்டம் படைத்தார் என்றார்
தென்புலத் தோர்கட மையைஆட வரிலார்
இன்றிங்கே அனேகர் செய்கின்றார் உண்மை
தென்புலத் திதியென்ன கொள்ளியும் போட்டார்
தொன்று தொட்டு நடப்பதிது புதுமையல்ல
திருவள் ளுவனுடன் புறநானூர் புகன்றதோ
பிராமணன் தின்பண்டம் கேட்டான் என்று
கொடுப்பவன் கொடுக்க நீயென்ன நடுவில்
கொடுக்கிறான் பலருக்கும் அன்னம் அன்று
தடுக்கநீ விழைவதேன் எதிரியா பார்ப்பனன்
ஈதலும் அறமாம் ஒளவை சொன்னாளே
ஈயாபத் தனாநீயும் கொடுமை
ஈனபுத்தி பெரியார் கொள்கைபின் பற்றினாயே
இலக்கியன் என்ற அன்பர் என்ன இலக்கியம் படித்தாரோ தெரியவில்லை
அவர் தெளி தமிழ் பத்திக்கையில் புறானாநூறில் இரு பாடல்களை எழுதி க்குறிப்பிட்டார்
ஆண்பிள்ளை இல்லாத் கைம்பெண் ஒருத்தி தென்புலத் தில் உறையும் தன் கணவனுக்கு
ஆண்பிள்ளை யில்லாததால் தானே யானைக் காலளவு மெழுகி வெள்ளமுது பிண்டம்
செய்து அவனுக்கு உண்ணும்படி கொடுத்தாள் என்றும் இன்னொரு பாட்டில் முறமளவு
மெழுகிப் படைத்தாள் என்ற இரு பாட்டிற்கு விளக்கம் எப்படி கொடுக்கிறார். பாருங்கள்
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (குறள் 43)
வள்ளுவன் இல்லறத்திலிருக்கும் குடும்பத்தலைவனின் முக்கிய ஐந்து கடமைகள்
1..இறந்து பட்ட மூதாதையர்க்கு ஆண்டுதோறும் திதி செய்தல்
2. தவறாது தெய்வ காரியங்களுக்கு உதவுவதும்தொழுதல் செய்வதும்
3. செல்விருந்து விட்டு வருவிருந்து உபசரித்தல்
4... உறவினர்களுக்கு துன்ப காலத்தில் வேண்டியன செய்து உபசரி த்தல்
5. பிறகு தன்னையும் தன்னை நம்பியுள்ள மனைவி மக்களையும் பாதுகாத்தல்
கடமை என்றார்.
இதையேதான் கண்ணகியும் நாடுகாண் காதையில் கோவலனி்டம் தான் துறவிகளையும்
விருந்தினரையும் சுற்றத்தையும் உபசரிக்க முடியாமல் போனதே என்று குறைபட்டுக்
கொள்கிறார்
இங்குதான் இலக்கியன் என்பவர் தென்புலத்தார் என்பதை பரிமேலழகர் உரையெழுதும்
போது சாணக்கிய அர்த்த சாஸ்தி ரத்தில் உள்ள பிதுரகள் என்பதை நுழைத்து அதற்கு
இறந்துபட்ட பிதுர்கள் விரும்பின பொருள்களை யெல்லாம் பிராமனார்க்குக் கொடுக்க
வேண்டும் என்ற நிலை வந்தது என்று ஒரு அபாண்டத்தை பரிமேலழகர் மீது வைக்கிறார்.
இது இந்தபாட்டின் விளக்கமா ? தேவையற்ற பொய்யால் தமிழைத் தமிழனை அழிக்கிறாரா?
பரிமேலழகர் உரையில் எங்கேயாவது திதிக்கு பிராமணனை வைத்து நடத்து என்றாரா ?
இல்லயே. அவனவன் விருப்பப்படி செய்கிறான். இதில் தலையிட யாருக்கும் உரிமை
யில்லை. சிலரே ஐயர் வைக்கிறார் . பலரும் இறந்தவரின் பெயரால் 100 பேருக்கு
அன்னதானம் செய்கிறார்.எல்லோருமா
ஐயர் வைத்து திதி கொடுக்கிறார். இல்லையே !! பெண்களே பலவீட்டில் நடத்துகிறார்,
என்பது கூடவா இந்தப்புலவர்க்குத் தெரியாது. ஏனோ மற்றவர்கள் விருப்பத்தை இவர்கள்
விருப்பமாக அநியாயமாக மாற்ற முயல்கிறார். அது முடியக்கூடியக் காரியமா என்ன
பரிமேலழகர் யார் அவர் என்ன கருணாநிதி குறளின் கடவுள் வாழ்த்திற்கு மழுப்பலாய்
எழுதியதைப் போலவா எழுதினார். அவர் உரையை உலகத் தமிழர் பாராட்ட இவர் ஏனோ
இப்படிப் பழியை .சுமத்துகிறார்கள். யார் கேட்பது என்ற தைரியம்
இதுவரை எந்தப் புலவனாவது கவிஞனாவது கருணாநிதி எழுதியக் குறளோ வியத்தில்
கடவுள் வாழ்த்து விளக்கம் சரியில்லை என்று தைரியமாய் எடுத்து சொன்னதார் சொல்லும்.
உண்மைத்தமிழன் இங்காருமில்லை. இருந்தால் முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்
குறளுக்கு 350 வது உரை தேவைதானா.? கேட்க தைரியம் உண்டா? கிடையாது. இனி
யாகிலும் பொய்த் திராவிடத் தமிழரை விரட்டுங்கள் பார்ப்போம்.
.
தற்கால புலவர்கள் முதலில் அவர்கள் யாரென்று ஒரு நிலை பாட்டிற்கு வரவேண்டும்
இமயமலை அடிவாரத்தில் (1000 மைலுக்கு அப்பால்). தோன்றிய சிந்து நதிக் கரை
நாகரீகத்தை கால்டுவெல் 1860 இல் கண்டு பிடித்தார். அது திராவிட நாகரீகம் என்று
அன்று பெயர் வைத்தார் காரணம் அங்கு கிடைத்த எழுத்துக்கள் பலதுமல்ல சிலதுகளே
தென்னிந்திய எழுத்துக்களை ஒத்துள்ளதென்றான். இதேபோல சில எழுத்துக்கள்
காந்தாரம் மணிப்பூர் மத்திய பிரதேச எழுத்துக்களிலும் காணப்படுகிறது என்றான்.
தெற்கு என்பதற்கு திராவிடமென்று வடதேசத்தார் சொல்வராம் .தமிழிலோ தமிழ் மொழி
இலக்கியத்திலோ திராவிடம் என்ற சொல் அல்லது வார்த்தைக் கிடையாது. தமிழரே
எந்தத் தமிழ் இலக்கியத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கிறது என்பதைக் காட்டுங்கள்.
இதையெல்லாம் படித்து ஆராயாது வெள்ளையன் எழுதிய இந்திய சரித்திரம் படித்த
அனைவரும் தமிழ் மலையாளம் கன்னடர் தெலுங்கர் அனைவரையும் 1860 க்குப்
பிறகு திராவிடர் என்று குறிப்பிட்டார். மலையாளி தெலுங்கன் கன்னட ன் இதை
ஏற்கவில்லை. வேலைவெட்டி இல்லாத பெரியாருக்கு அண்ணா இதைச்சொல்ல
திராவிடர்கழகம் 1940 க்குப் பிறகு பிறந்தது. இன்றை ப்புலவரும் கவிஞரு ம் பரம்பரைத்
தமிழரா கால்டுவெல் லின் திராவிடக் கண்டுபிடிப்பா ? தெளிவு கொள்ளுங்கள்
உலகில் இல்லாத திராவிடன் ஒன்று மற்றொன்றுபரம்பரைத் தமிழன். இவர் இதில்
எது என்பதைச் சொல்ல.ட்டும்
முடிந்தால் தமிழ்க் கவிதை எழுத சொல்லிக் கொடுக்கட்டும் அவருக்கேகே புரியாத
வடமொழியின் கருத்தென மக்களிடம் எதையும் பரப்பாதீர். மக்களுக்குத் தெரியும் அவரு
அவரின் குடும்பத்துக்கோ சுமார் 100 ஆண்டுகளாக தெரிந்த வரையில் பார்ப்பனர்கள்
துரோகம் செய்யவில்லை. பிறகென்ன பார் பானைக் குற்றம் சொல்கிறீர். பெரியார்
பார்ப்பனனை திட்டியே வளர்ந்தான் வாழ்ந்தான் . இதுவாத் தமிழரின் குணமா.
.தமிழரைக்கெடுத்தான். இனியும் பெரியாரை போற்றிட உமது மதிப்பும் கெடும்.
பக்தியைப் போற்றும். தமிழன் எதையும் குறைசொல்ல ஆரம்பித்தான். பொய் சொல்லி
அதை உண்மை போல் பேசி மற்றவரையும் நம்ப வைக்கிறான். இப்படியேத் தமிழர் கெட்டார்.
இதை சந்தர்ப்பமாக முசுலீம் கிருத்துவரும் எடுத்து மதம் பரப்ப நீரோ தமிழரின் ஒற்றுமை.
குலைக்கின்றீர். பக்தி யில்லாது தமிழில்லையே. 80% பக்தி இலக்கியத் தமிழே. தெரிந்தும்
குட்டையில் மீன்பிடித்து தமிழை சாகடிக்கின்றீர். நீர் என்ன இலக்கியம் படைத்தீர் தமிழில்
சொல்லும் கணக்கை. இதுவரை முருகன் மேல் சிவனார் மேல் ஒருபாட்டை எழுதியுள்ளீரா?
சொல்லும்