நேயம் எதுவோ

ஆறாம் அறிவு படைத்தவனின்
அடிப்படையே நேயம்
பொதுவாக பெரும்பாலானவர்களில்
இல்லை என்பதே எதார்த்தம் ..............

கூடி வாழ்தல் கோடி நன்மை என்றான்
இன்று கூடி வாழ்தலும் இல்லை
கோடி நன்மையையும் இல்லை ................

பதறி துடிக்கும் தனிநபர் வாழ்க்கையில்
சிதறிப்போனதில் பல குடும்ப சித்திரங்களும் அடக்கம் .....................

அடுத்தவரின் நலனை அணுவளவும் நேசிக்காத சுயநலம் -
பெற்றவரை கூட அனாதையாக்கி இருக்கிறது .............

காலம்காலமாக கைதூக்கி கற்பித்து
வாழ்வியல் விளக்கேற்றிய தெய்வங்கள் கூட
தெருவில் அனாதையாய் ..............

கருவில் சுமந்தவளை தெருவில் விடுவதும்
தோளில் சுமந்தவனை துரத்தி அடிப்பதும்
நேயம் இல்லாதவனின் நெறியற்ற செயல் .............

சொத்திற்கு சொந்தம் போடும்
உதிரத்து உறவுகள் எல்லாம்
உயிர்தந்த உறவினை ஒருநாளும் மதிப்பதில்லை ..............

மூப்படைந்து மூச்சடைக்கும்போது கூட
ஆறுதலுக்கு ஆளில்லாமல் அனாதையாய் மடியும்
அன்பு சுமந்த உள்ளங்கள் அதிகம் ...............

நேசிக்க தெரிந்தவர்களிடத்திலேயே நேயம் இருக்கும்
அது எதையும் எதிர்பார்க்காதது என்பதும் எதார்த்தம் .............

எழுதியவர் : விநாயகமுருகன் (10-Aug-20, 8:21 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : neyam ethuvo
பார்வை : 62

மேலே