இருப்பு

பாதி இரவுகளில்
விழித்துக் கொள்கிறது
பழைய மிருகங்கள்

நேற்றைய பொழுதின்
எச்சம் இன்னும்
கொஞ்சம் இருக்கிறது
உறங்கி விடாமல்
என்னை உறங்க விடாமல்

அவரவர் தேவைக்கு
அவரவரே தீர்மானித்துக் கொண்டார்கள்
நான் யார் என்பதையும்
எதுவரை என்பதையும்

இறுக்கிய கரங்கள்
கொஞ்சம் இளகிக் கொள்கிறது
என் இருப்பு போதுமென்று..

எழுதியவர் : கற்றது தமிழ் மாரி (10-Aug-20, 12:56 am)
சேர்த்தது : கற்றது தமிழ் மாரி
Tanglish : iyalbu
பார்வை : 65

மேலே