காதல் சிறகு

தாசி மகள் !

கனவோடு கட்டி வைத்த கோட்டையை - இன்று
காற்றோடு கரைத்துவிட்டேன்
கானாமல் போன என் இதயத்தை - இன்று
கருகவே செய்துவிட்டேன்

காதலி காதலி காதல் நான் செய்த பாவமடி
கனவோடு அலைகிறேன் காதல் ஒரு பாரமடி
உன்னை என் கண்களுக்குள் வைத்திருந்தேன்
கண்ணீரும் கரித்ததடி .

ஊரென்ன உலகே உன்னை வெறுத்தாலும்
நான் மட்டும் ரசித்தேனடி
விபச்சாரி மகளான உன்னை
மனம் புரிய நினைத்தேனடி
அதனால் நீ கொடுத்தாய்
காதல் தண்டனையடி

உன்னைபற்றி சிலபேர் சொன்னாலும்
நான்மட்டும் கேட்கலையே
பாழாய் போன காதலையும் வெறுக்கலையே

பெண்ணே !
வெற்றிலை போட்டால்தான்
நாக்கு சிவக்கிறது -ஆனால்
உன்னை நினைத்தாலே -என்
நாக்கு சிவக்கிறது

பெண்ணே !
ஊரில் பல பெண்கள் இருக்க
உனை மட்டும் பார்த்தேனடி
காதல் எனும் பாவத்தை செய்தேனடி

பெண்ணே !
மல்லிகைப்பூ மலர்ந்ததென்று ஆசைப்பட்டேன்
பிறகுதான் தெரிந்தது அது மாற்றான் தொட்டது மல்லிகையென
மெழுகாய் உருகினேன் உனக்காய் - நீ
ஒருமுறை யோசித்துப்பார் எனக்காய்

உருகிடும் வர்த்தியாகிலும்
தரையை சேர்கிறது - ஆனால்
உனக்காய் உருகிய நான் ..........

பெண்ணே !
என் இதய பெட்டிக்குள் உனை
குடி வைத்தேனே தவிர
பூட்ட மறந்து விட்டேன்

அதனால்தான் என்னவோ நீ
கதவை திறந்து கொண்டு
வெளியே போய்விட்டாய்..........

போதுமடி பெண்ணே போதும்
இதுவரை உனக்காய் நான் பட்ட
கஷ்ட்டங்கள்

தீருமடி பெண்ணே தீரும்
என்றைக்காவது ஒரு நாள்
நான் பட்ட நஷ்ட்டங்கள் .............!

அன்புடன்
ராமன் மகேந்திரன்

எழுதியவர் : ராமன் MAHENDIRAN (11-Aug-20, 1:17 pm)
Tanglish : kaadhal siragu
பார்வை : 52

மேலே