உன் நினைவுகள் என்னை தொடரும்வரை 555
என்னுயிரே...
உன்னுடன் நான்
இருந்த நாட்களில்...
பல இரவுகள் என்
விழிகள் உறங்கியதில்லை...
உன்னுடன் நான் இருந்த
மணித்துளிகளை ரசித்துக்கொண்டு...
என்னை நீ
பிரிந்த நாள் முதல்...
என் விழிகள் உறங்காத
நாட்களே இல்லையடி...
தினம் தினம் நீ என் கனவில்
வருவதால் தானடி...
என் ஜீவன் இன்னும்
உயிர் வாழுதடி...
உன்னை மறக்க
நினைத்தாலும்...
மறுபடி மறுபடியும் உன்
நினைவுகள் என்னை தொடருதடி...
உன் நினைவுகள்
தொடரும்வரை...
என் ஜீவன்
வாழும் மண்ணில்.....
முதல்பூ பெ .மணி .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
