என் மனதோடு மழைக்காலம் 555

என்னவளே...


என் கண்களில்
உன் பிம்பமும்...

என் உள்ளத்தில் உன் உருவமும்
பதித்து வைத்திருக்கிகிறேன்...

தினம் கண்களால் உன்னை
பார்த்து கொண்டும்...உ

ள்ளத்தால் உன்னிடம்
பேசிக்கொண்டும் நான் இருக்கிறேன்...

நீயும் நானும் தனித்து இருப்பதாக
எல்லோரும் நினைக்கிறார்கள்...

தினம் கூடி பேசி
மகிழ்ந்தால்தான் காதல் மலருமா...

நம் உடல்கள்தான்
பிரிந்திருக்கிறது...

நம்
உள்ளங்கள் இல்லை...

அழகே நாம் தனித்து இருக்கும்
ஒவ்வொரு நாளும்...

நம் காதலின் ஆழம்
வளர்ந்துகொண்டே செல்கிறது...

யாருக்கு தெரியும்
உன்னையும் என்னையும் தவிர...

வெளியில்
வெயில்காலம் என்றாலும்...

என் மனதோடு தினம்
மழை காலம்தான்...

உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நிமிடமும்.....


முதல் பூ பெ.மணி

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Aug-20, 6:24 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 364

மேலே