உயிர் காக்கும் மருந்து
நடமாடும் மலரே
என் பலகால கனவே
நதியோடை இடையே
இடைகொண்ட பிறையே
சிறை கொள்ளும் துணிவே
தருகின்ற விழியே
விழி விழுகின்ற வழியே
தினம் செல்லும் என் மதியே
இமைத்தாண்டி வரவே
உன் இரவுக்குள் புகவே
உன் உறக்கத்தில் நின்று
என் உயிர்க்காதல் தரவே
உயிர் கொள்ளும் அளவை
பூ கொண்டதென்ன
பூ கொள்ளும் இடையை
நீ கொண்டதென்ன
நிலவாக சிரித்தாய்
நினைவாலே எரித்தாய்
நதியாக வந்தால்
என் யிர்த்தாகம் நீங்கும்
உயிராக வா
என் உயிர்காக்க வா
மருந்தாக காதல்
தடையின்றி தா ..