கெளசிக் - ஒரு சுட்டி குழத்தை🌹
கெளசிக் - ஒரு சுட்டி குழத்தை🌹
கால மகள் பெற்றெடுத்த தங்க மகன்
இந்த பூலோகத்தில் பிறந்த தேவன் இவன்
என் மனதை கவர்ந்துவிட்ட கெளசிக் எனும்
அதிசயம் இவன்
மழழையில் மகோன்னதம் இவன்
எப்போதும் என்னை பரவச படுத்தும்
மகா கலைஞன் இவன்.
ஒரு நாள் என்ன
ஓராயிரம் நேரம் நாள்
இவனுடன் செலவழிக்கலாம்
அவ்வளவு அற்புதம் நிறைந்த பேரதிசய குழந்தை
கொஞ்சும் மழலையில் மொழியில் ஒலிந்திருக்கும் ஆபார அறிவு
சேட்டை பல செய்தாலும்
கோபம் ஏற்படுத்தாமல் அதை ரசிக்கும்படி செய்யும் பாங்கு
எங்கு கற்றான் இந்த வித்தை எல்லாம் இவையாவும்
அவன் அன்னையின் வயிற்றினிலேயா!!
அபாரம், அதிசயம்!!
கல்வி அவன் நாவில்
சரஸ்வதியாக தாண்டவம் ஆடுகிறாள்
மழலை குரலில் அவன் பாடும் ஒவ்வோரு பாட்டும் கேட்பவர் செவிகளுக்கு தேவாமிர்தம்
பக்தி பாடல் அவன் பாடினால்
அகம் மகிழும், உடல் புல்லரிக்கும்
குத்து பாட்டும் அவன் விட்டு வைப்பதில்லை
ஆட்டமா அது
பிரபுதேவா தோற்று போவார் போங்கள்
என் சிந்தையில் நிறந்திர குடிபுகுந்த
அந்த குழந்தை கெளசிக்
பல்லாண்டு
பலநூறு ஆண்டு வாழ
தினம் வணங்கும் ஆண்டவனை வேண்டுகிறேன்.
- பாலு.