சாதி
உயர்ந்தவனின் மயிர்களெலாம் முதிர்ந்தவுடன் நரைத்திடாதோ!
தாழ்ந்தவனும் தேரிழுத்தால் சக்கரமும் சுழன்றிடாதோ!
உயர்ந்தவனின் வியர்வையெலாம் இனிப்புச்சுவை புரிந்திடுமோ?
தாழ்ந்தவனும் கோயில்தனில்
மணியடித்தால் ஒலித்திடாதோ!
மாமிசத்தை மறுப்பவனின்
நெய்களெலாம் ருசித்திடுமோ!
தாழ்ந்தவனும் படித்துவிட்டால்
சாக்கடையும் தேங்கிடுமோ!
உயர்ந்தவனின் வயிர்களெலாம்
எந்தநாளும் பசித்திடாதோ!
தாழ்ந்தவனும் பூசைசெய்தால்
பூமியெல்லாம் பிளந்திடுமோ!
உயர்ந்தவனும் தினம்கழிக்கும் மலங்களெலாம் மணப்பதுண்டோ?