தூக்கணாங்குருவி

உன் இதய கூட்டில்
தூக்கணாங்குருவி போல்
என் காதலை கூடு கட்டி
நூறாண்டு காலம் வாழ ஆசை.

மறுப்பின்றி...நீ
அனுமதி தந்தால்..! !
உனக்கு ஓரு உறுதிமொழி
நான் தருகிறேன்....! !

இடர்கள் யாவுமின்றி
இன்ப வானில் சிறகடித்து
வலம் வருவோம் உல்லாசமாக...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Aug-20, 3:18 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 70

மேலே