கிராமத்து காதல்

கண்ணை மூடி கொண்டு
சிந்தித்தேன்
நல்ல கவிதை படைக்க
நல்ல விதை
வேண்டுமென்று ....! !

கற்பனை குதிரையை
திக்கெட்டும் பறக்கவிட்டேன்...! !

முடிவில்...
பாரதி ராஜா பாணியில்
என் இனிய கிராமத்து காதலே
என்று துவங்கினேன்
கவிதை வரிகளை...! !

ஆம்...
என் இனிய வாசகர்களே...! !
கிராமத்து காதலர்கள்
கொடுத்து வைத்தவர்கள்.

வயல்வெளி என்றும்
தோப்பு என்றும்
ஏரிக்கரை மேடு என்றும்...! !

சுகமாக தங்கள் காதலை
வளர்த்து கொண்டவர்களை
வர்ணிக்க வார்த்தைகள்
ஆயிரம் இருந்தாலும் ...! !

அந்த சுகம் தரும்
சொர்க்கத்தை
கவிதை வரிகளில்
சொல்ல முயன்றேன்...
முடியவில்லை...! !

தயவு செய்து
மன்னிக்கவும்
காவியம் தான்
படைக்க வேண்டும்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Aug-20, 1:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 62

மேலே