சீர்திருத்தம்

சாக்கடைகள் தூர்வாரப்பட்டன எங்கள் தெருவில்

குவித்து வைத்த மண்கழிவுகள் அக்கா பல்துலக்கிய நுரையை குவித்து துப்புவதற்கேற்ற இடமாயிற்று

அப்பா கண்காணாமல் மிதித்து வந்த அசிங்கங்களை கழுவி விடுவதற்கு ஏற்ற இடமாயிற்று

அம்மா அழுகிய காய்கறி கழிவுகளை தூக்கி எறிவதற்கேற்ற இடமாயிற்று

நானும் நண்பர்களும் கழித்தோம்
எங்கள் சிறுபொழுதுகளை இடையிடையே  அசுத்தங்களுடன்

எழுதியவர் : S.Ra (26-Aug-20, 7:10 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 406

மேலே