பக்தி

அரியணை துறந்து வனத்தில் நுழைந்த இராம நாமத்தின் மானங் காக்கும் ஞானமுள்ள பலராமன்கள் அறக்கருத்து நிறைந்திருக்கும் இராமாயணத்தை மயானம் செல்லும் வரை உரைப்பதற்கு மருந்துக்கும் நினைப்பாரில்லை!

நல்லார் உள்ளமே இல்லமாயுள்ள அல்லாவை அல்லும் பகலும் தொழும் எல்லாரும் நபியின் நன்மொழியை நற்கூர்ந்துப் படிப்பாரில்லை!

நேசத்தின் சுவாசமான இயேசுவை பூசைசெய்யும் விசுவாசிகள் விவிலியத்தை விளையாட்டாய் விடுமுறையில் கூட வாசிப்பதில்லை!

சுடலைப் பொடியில் உடலை மறைக்கும் பிறைசூடனை இறையென உரைக்கும் சிவனடியார்
தீஞ்சுவை திருவாசகத்தில் ஒரு வாசகமும் அறியார்!
தேனூறும் தேவாரத்தின் ஒருவோரமும் தெரியார்!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Aug-20, 4:53 pm)
பார்வை : 51

மேலே