வேண்டாத மதம் தாமதம்
வேண்டாத மதம் தாமதம்
××××××××××××××××××××××
நாளை என்றும்
கடத்தாதே
நல்வாய்ப்பு மீண்டும்
வாய்க்காதே
அயற்சிக் கொண்டால்
பெறமுடியாதே
முயற்சி என்றும்
பொய்க்காதே
மதங்களில் கொடியது
தாமதம்
உயிரையும் போக்கித்
தூக்கிலிடும்
நேரம் விரயம்
செய்தாலே
காலம் மீண்டும்
திரும்பாதே
வாழ்க்கை கடந்து
சென்றுவிடும்
இளமையும் காலத்தில்
கரைந்துவிடும்
தாமதத்தில் எதையும்
இழக்காதே
மீண்டும் மானிடப்பிறவி
கிடைக்காதே