அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தென்காசி
தேனருவித் தென்றல்
நறுமண மரங்கள்
செடிகொடிகள் வனங்கள் கடந்து
மலர்ப் பொய்கைகள் நுழைந்து
இயற்கை எழுதும் கவிதையாய்
குற்றாலத் தென்றலாய்க்
குளிர்ந்து வீசும் தென்காசி...
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்னால் முருகப் பெருமான்
அருள்மிகு செந்திலாண்டவர்...
தென்காசி பிற்படுத்தப்பட்ட பகுதியை
தொழில்நுட்பத்தால்... வேலைவாய்ப்பால்
வளப்படுத்த வேண்டும் என்று
விரும்பி இருப்பார் போலும்...
சொக்கம்பட்டி திரிகூடபுரம்
திருமிகு மாடசாமி அவர்கள்
தவமாய்த் தவமிருந்து வேண்டியதில்
வரமாய்... வசந்தமாய் வந்தது
இங்கு அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி...
அதுவும்... முன்னாள் முதலமைச்சர்
பொன்மனச் செம்மல்
புரட்சித்தலைவர் மக்கள் திலகம்
எம்ஜிஆர் அவர்களின்
ஆசிகள் கலந்த அன்பான
அனுமதியின் பெயரில்...
அரசுத் துறைகள்...
தனியார் நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்களில்
குதிரைக் கொம்பாய்
இருந்த வேலைவாய்ப்பு
வாசல் வந்த வெளிச்சமாய்
வசந்தங்களின் விடியலாய்
வீடுதேடி வருகிறது
செந்திலாண்டவர் பாலிடெக்னிக்
கல்லூரியில் படிக்கும்
மாணவச் செல்வங்களுக்கு...
கேடில் விழுச்செல்வம்
கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை...
என்று பாடிய தெய்வப்புலவர்
வள்ளுவரின் வார்த்தைகள்
எல்லாம் எங்களுக்கு மிஷன்...
ஆலைகள் வைப்போம் கல்விச்
சாலைகள் வைப்போம்...
காசி நகர்ப்புலவர்
பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர்
கருவி செய்வோம்...
உலகத் தொழிலனைத்தும்
உவந்து செய்வோம்....
என்று பாடிய மகாகவி
பாரதியின் பாடல் வரிகள்
எல்லாம் எங்களுக்கு விஷன்...
கல்லூரி ஆரம்பித்த
காலத்திலிருந்தே இன்றுவரை
பணியாற்றும் ஆசிரியர்கள்...
மற்றும் பலதுறைகளில்
பாங்காய் அனுபவம் பெற்ற
ஆசிரியர்களால் ஒளிரும்...
கரும்பலகைகளில் வெள்ளை எழுத்து...
அதனால் அழகாய் உயரும்
மாணவர்களின் தலையெழுத்து...
நவீன உலகின் சவால்களைச்
சமாளிக்க கல்வியோடு பிற
திறமைகளையும் தலைமைப்பண்பையும்
ஆளுமை... தன்னம்பிக்கையையும்
வளர்த்தெடுத்து உலகை எதிர்கொள்ள
வாளும் கேடயமுமாய்
தேசிய மாணவர் படை ஓரலகும்
நாட்டு நலப்பணித் திட்டம் ஈரலகும்
செவ்வனே இங்கு சிறப்பாய்
செயல்பட்டு வருகிறது...
சுதந்திர இந்தியாவில்
முதன் முதலாய்
நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு
ஜனாதிபதி அவர்களின்
தேசிய விருது பெற்ற
ஒரே பாலிடெக்னிக் கல்லூரி
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி...
அனைவரது நேர்த்தியான
உழைப்பு இதற்கு உண்டு நிதம்..
இது ஒருபானை சோற்றிற்கு
ஒரு சோறு பதம்...
பள்ளிப் படிப்பில் அதிக
மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே
பாலிடெக்னிக் கல்லூரிகளில்
இடம் என்றிருந்த காலத்திலும்
குறைந்தபட்ச மதிப்பெண்கள்
பெற்ற மாணவர்களையும்
கல்லூரியில் சேர்த்து
அதிகபட்ச மதிப்பெண்கள் பெற
ஆவன செய்து அவர்களின்
வாழ்வில் ஒளியேற்றியது
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி...
அது இன்றளவும் தொடர்கிறது..
மாநில அளவில் தகுதி பெற்று
அதிக மாணவர்கள் தேர்ச்சிபெற்று
ஒவ்வொரு பருவத்திலும்
பெயரும் புகழும் பெற்று வருகிறது...
சிற்பங்களும் இங்கு சிற்பிகளாகும்...
சிற்பிகளோடு சேர்ந்து தானும் தன்னை
அழகாய்ச் செதுக்கிக் கொள்ளும்
எல்லோரும் தம்மை விரும்பும் வண்ணம்.
எங்கள் மாணவர்களின்
படிப்பின்... ஒழுக்கத்தின்...
பழக்க வழக்கங்களின்
பண்பட்ட பண்பாடுகளின்
நேர்த்தியில்... முழுமையில்...
நந்தவனங்களும் பூங்காவனங்களும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்
தம்மை மேலும் மெருகேற்றிக் கொள்ள..
வெற்றி சேரும் இடங்களில்
மட்டுமல்ல... அதை நோக்கி
பயணிக்கும் விதங்களிலும்தான்...
கல்லூரி நிர்வாகத்தால்
நவீனத்தை சூடிக்கொண்ட
ஆய்வகங்கள்... நூலகம்
குளிரூட்டப்பட்ட கணினி மையங்கள்...
வகுப்பறைகள்.. கூட்ட அரங்கம்..
பேருந்துகள்.. விடுதிகள்.. மற்றும்
இனிமையான சூழல் கண்டு
வகுப்புகளுக்கு வரும் மாணவர்
எண்ணிக்கையில் என்றும்
குறையாமல் இருப்பர்...
எப்போதாவது வகுப்புகளுக்கு
வராமல் போவதைக்
குறையாக நினைப்பர்...
எங்கள் ஆசிரியர்கள்
கல்வியோடு ஒழுக்கத்தையும்
கற்றுக் கொடுப்பர்... இதனால்
மாணவர்களுக்கு வேலைக்கு
உத்திரவாதம் தரும்
படிப்பு அத்துபடி... பெற்றோரின்
எண்ணங்கள் ஈடேறும்
நினைத்தது நினைத்தபடி... இதை
இங்கு சொல்லியாக வேண்டும்
உள்ளதை உள்ளபடி...
கிராமத்து மாணவர்களின்
வாழ்வாதாரம் உயர
ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில்
படித்த மாணவர்கள்
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
பணிபுரிகிறார்கள்...
ஜப்பானில் பணிபுரிய
அங்கிருந்தே இங்கு வந்து
மாணவர்களைத் தேர்ந்தெடுத்துச்
செல்கிறார்கள்... இது
எங்கள் கல்லூரி நிறுவிய
நிறுவனத் தாளாளரின் கனவு...
இந்தியாவிலேயே மாதிரி
பாலிடெக்னிக் கல்லூரியாய்
இந்தக் கல்லூரியை மாற்றுவது
எங்கள் எல்லோருடைய கனவு...
இதற்கு ஒன்றுபட்டு உழைத்தால்
பத்தும் பத்தும் இருபதல்ல...
அதற்கும் மேல்... என்பதை
அறிந்து செயலாற்றி வருகிறோம்...
கல்லூரியில் பயிலும் மாணவர்கள்
ஒவ்வொருவர் வாழ்விலும்
வசந்தங்கள் வரமாகி
வளங்கள் வசமாகி
மகிழ்ந்து வாழ்ந்திட
ஆவன செய்து வருகிறோம்...
அன்புடன்...
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி,
தென்காசி - 627811.
👍💐🌹